Thursday, December 27, 2012

வார்த்தைகளில் வார்க்கப்பட்ட அன்பு பரிசு - முதல் பதிவாக

4.7.2012  
அன்புள்ள அப்பாவிற்கு ,

                        பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் .

             மூன்று வருஷத்துல நம்மளோட தொடர்பு அலைபேசில தான். தினமும் மம்மி சாப்பிட்டியா ,தூங்கினியான்னு , நீங்க உடம்ப பாத்துக்கோ நல்லா படின்னு.உங்களுக்கு இந்த வருஷம் பரிசளிக்கலாம்ன்னு card, புத்தகம்னு நிறைய தேடினேன.கடிதங்கள் எழுதபடுவதில்லை ,காத்திருத்தல் இல்லைன்னுலாம் கவிதை கிறுக்கிருகிறேன்.ஆனா நான் எழுதும் முதன்முதல் கடிதம் உங்கள் பிறந்தநாள் பரிசாக .

           Schoolல கட்டூரை நோட்ல ,விடுதில இருந்து கடிதம் எழுதுற மாறி வருஷா வருஷம் எழுதி பழகிருந்தாலும் , அது எல்லாம் டூர் போறோம் பணம் மணி ஆர்டர் பண்ணவும்னு எழுதுனதா தான் ஞாபகம்.முழுக்க முழுக்க அன்பை மட்டுமே பரிமாற எழுதப்படும் கடிதம் இது .

           நீங்க , நான் கைபிடித்து நடக்கும் தோழனாக மாறிவிட்ட இந்த நாட்களில் உங்கள் சைக்கிள் பெல் சத்தம் கேட்டே பயந்து வீட்டுக்குள் ஓடிய சிறு வயது நாட்களை நினைத்தால் சிரிப்போடு அழுகையும் முட்டி கொண்டு வருகிறது .

          மம்மி சொல்லி கேட்டதுண்டு ,பெண்ணோ ஆணோ ஒரே ஒரு குழந்தை போதும்ன்னு நீங்க சொன்னதா. Jackpot  அடிச்சது twins உங்களுக்கு . ஆனா இன்னைக்கு வர என்னால கண்டுபிடிக்க முடியாத விடை , நான் இலவச இணைப்பா இல்ல அவ இலவச இணைப்பான்னு தான் ! துலாபாரத்துல வைச்சா ரெண்டு பேர்த்துக்கும் நீங்க காட்ற அன்பு ஒரு மயிலறகு கூட அந்த பக்கம் இந்த பக்கம் சரியாது .

           நான் தனியா வந்த பின்னாடி இந்த தூரத்துனால நீங்க எனக்கு கொஞ்சம் அதிகம் செய்ததை பார்த்து அவ எதாச்சும் நினைச்சுருந்தான்னா இனி அவளும் ஏன் அந்த மாற்றம்னு புரிஞ்சுப்பா !

              என்னோட பால்யத்த திரும்பி பார்க்கையில் இருக்கறதுலையே பெஸ்ட்  ஸ்கூல் , LKGல இருந்து, 12th ல கடைசி மாசத்துல கூட பிசிக்ஸுக்குன்னு தனி டியூசன்ன்னு உங்களால முடிஞ்ச எல்லாத்தையும் செஞ்சுருகீங்க. ஆனா ஒரு முறை கூட கணிதத்துல நூற்றுக்கு நூறு வாங்கினது இல்ல.கொஞ்சம் அதிகமா படிச்சுருக்கலாமோன்னு இப்ப தோணுது.ஆனா அப்படி ஆயிருந்துசுன்னா நான் அங்கேயே படிச்சுருப்பன்ல.இந்த கடிதம்லாம் இப்ப வாசிச்சுட்டே இருந்துருக்க மாட்டிங்க .

               சென்னைல கவுன்செலிங் முடிச்சு சந்தோசமா திரும்பி வரேல மம்மி அழுதுட்டு இருந்தத பார்த்தப்போ தான் ஏதோ தப்பு ஆயிடுசோன்னு நினைத்தேன் .இங்க தூத்துக்குடி கிளம்பி வரேல கூட தெரியல .

              முதல் நாள் ஸ்கூலுக்கு போறப்ப கூட அழுகாத நான் காலேஜ்க்கு போறப்போ தேம்பி தேம்பி அழுதுட்டு போனேன்.அப்ப தான் தோனுச்சு .இங்க வந்து ஒரு வருஷம் வருஷம் வர என்ன, ஏது ,எதுக்குன்னே புரியல. அப்படி அப்படியே ஓடிடுச்சு .

             இந்த ஊர இப்ப கூட புடிக்கல தான் . ஆனா என்னோட பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரும் இந்த ஊருகாரங்க ங்கற ஒரே காரணத்துனால வேணா கொஞ்சம் கொஞ்சம் பிடிச்சுருக்கு .

             நான் எவ்வளவோ அழுது பொறண்டு அடம் பிடிச்சாலும் , பிரச்சனை பண்ணாலும் எப்படியோ மூணு வருஷம் ஓடி போயிருச்சு . இன்னும் ஒரு வருஷமும் கண் மூடி முழிக்கறதுக்குள்ள ஓடிரும்ன்னு நினைக்கறேன் .

           நான் நா.முத்துகுமார் எழுத்தாளரின் "அணிலாடும் முன்றில் " புத்தகம் படிக்கும் பொழுது எழுதின கவிதை இது .

என் அப்பாவிற்கான முதல் கடிதம் :

          இப்படி தொடங்குகிறது ...
          ஒரு கவிஞரின் கடிதம் 
          அப்பாவிற்காக ...
          "யோசித்து பார்கிறேன் ...
          என்றுமே நீங்கள் அழுது 
          நான் பார்த்ததே இல்லை ...
          எந்த அப்பாக்கள் ...
          பிள்ளைகள் முன்பு அழுது 
          இருக்கிறார்கள் ... !"
          இந்த வரிகளை வாசித்த 
          மறுகணம் ...
          நொறுங்கிவிட்டேன் ...
          ஒரு நாள் ...
          நீங்கள் எனக்காக 
          கண்ணீர் சிந்தியதை 
          விசும்பலுடன் அம்மா 
          உரைத்தது ... !
          கண்ணீர் மல்க 
          இப்போதே உரைத்து விடுகிறேன் 
          " I love u so much daddy " ...!
          எந்த இளவரசனும் 
          என்றுமே அமர முடியாது 
          இந்த ராஜாவின் ...
          சிம்மாசனத்தில் ...!!!

          இந்த கவிதை மட்டும் அல்ல நான் எழுதும் ஒவ்வொரு கவிதையுமே உங்களுக்கு தான் சமர்ப்பணம் .

          என்னை விட்டால் நான் எழுதி கொண்டே தான் இருப்பேன் . இந்த கடிதத்தை இங்கே முடித்து விடுகிறேன் .

          இந்த கடிதத்தில் இருக்கும் வார்த்தை பிழைகளுக்கும் , நான் செய்த பிழைகளுக்கும் சேர்த்தே மன்னிப்பு கோருகிறேன் .

இப்படிக்கு 
தங்கள் அன்பு மகள் 
ஜெய்          

2 comments:

  1. indha kaditham ezhuthiya naatkal ninaivukku varuginrana....... u should feel proud for best appa in the universe

    ReplyDelete